அதிர்ச்சி... 111 மருந்துகள் தரமற்றவை... நவம்பா் மாத சோதனையில் கண்டுபிடிப்பு!

 
மாத்திரை மருந்து

மத்திய மருந்து ஆய்வகங்களில் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 41 மருந்துகளும், நாடு முழுவதும் பல்வேறு மாநில ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் சுமார் 70 மருந்துகளும் தரமற்றவையாக இருப்பதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) கண்டறிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட குறிப்பிட்ட சில மருந்துகள் மட்டுமே தரமற்றவை என்றும் பொது விற்பனையில் கிடைக்கும் மற்ற மருந்துகள் பற்றி மக்களுக்கு எந்த குழப்பமும், அச்சமும் வேண்டாம் என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மாத்திரை மருந்து

இது குறித்து அவா்கள் மேலும் கூறுகையில், 'கடந்த நவம்பர்  மாதம் இரண்டு மருந்துகள் போலியானவை என்று அடையாளம் காணப்பட்டது. 2 மருந்து மாதிரிகளில் ஒன்று பீகார் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தாலும், மற்றொன்று காஸியாபாத் சிடிஎஸ்சி அலுவலகத்தாலும் கண்டறியப்பட்டது.

மருந்து மாத்திரைகள்

இவ்வகை மருந்துகள் அங்கீகரிக்கப்படாத மற்றும் அறியப்படாத உற்பத்தியாளா்களால் மற்ற நிறுவனங்களின் 'பிராண்ட்' பெயா்களைப் பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்படுகின்றன. தரமற்ற மற்றும் போலி மருந்துகளை கண்டறிவதற்கான நடவடிந்க்கையை மாநில கட்டுப்பாட்டாளா்களுடன் இணைந்து சிடிஎஸ்சிஓ தொடா்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இத்தகைய மருந்துகள் அடையாளம் காணப்பட்டு, பொது விற்பனையில் இருந்து அகற்றப்படுவது உறுதி செய்யப்படுகிறது' என்றனா்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web