அதிர்ச்சி... 5 மாதங்களில் 13 பேர் தெருநாய் கடித்து மரணம்... 10 பேர் தடுப்பூசி போடவில்லை!
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் இந்த வருடம் துவங்கியதில் இருந்து கடந்த 5 மாதங்களில் தெருநாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 10 பேர் ஒரு டோஸ் ரேபிஸ் தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளாமல் இறந்துள்ளனர். அதாவது ஐந்து உயிரிழப்புகளில் நான்கு பேர் நாய் கடித்த பின்பும் தடுப்பூசி எடுக்கவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
நாய் கடித்ததும், மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் மிகக் கொடிய நோய்களில் ஒன்றான ரேபிஸ் நோய் பாதிப்புகளில் இருந்து தற்கொத்துக் கொள்ள தடுப்பூசி அவசியம். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, மருத்துவ அறிகுறிகள் தோன்றியவுடன், ரேபிஸ் கிட்டத்தட்ட 100 சதவீதம் ஆபத்தானது.
சுகாதார சேவைகள் இயக்குநரகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இந்த வருடம் மே மாதம் வரை நாய்கடித்து உயிரிழந்த 13 பேரில் 5 பேர் நாய் கடித்ததையோ அல்லது நாய்களால் கீறல் ஏற்பட்டதையோ நினைவுபடுத்தவில்லை. வெறிநாய்க்கடியால் 3 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மீதமுள்ள 5 பேர் தெருநாய்களால் கீறப்பட்டது அல்லது கடித்ததால் உயிரிழந்துள்ளனர்.
மே 30ம் தேதி வரை, ஒரு உறுதிப்படுத்தப்பட்ட ரேபிஸ் நோயாளி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த ஆண்டு இதுவரை உயிரிழந்தவர்களில் 3 பேர் தங்களது வளர்ப்பு நாய்கள் காரணமாக ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
பாலக்காட்டில் உள்ள மன்னார்காடு பகுதியில் ரேபிஸ் நோய்க்கு தடுப்பூசி போடாமல் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இறப்புக்கான காரணத்தை ஆராய்ந்த சுகாதார அதிகாரிகள், அந்த பெண் ஒரு நாய் மற்றும் நாய்க்குட்டியை வளர்த்து வந்ததாக தெரிவித்தனர். சமீபத்தில், அவர் தெருவில் இருந்து ஒரு நாய்க்குட்டியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதே நாய்க்குட்டியால் அவர் கையில் கடிபட்டதை அவரது நெருங்கிய உறவினர்கள் உறுதிப்படுத்தினார்கள். செல்லப்பிராணிகளைக் கையாளும் போது அவர் கையுறைகளைப் பயன்படுத்தியதாகவும், நாய் கடித்ததற்கான அறிகுறிகளோ, இரத்தமோ இல்லை என்பதால், அவள் கையுறைகளில் நாய் கடித்திருக்கலாம் என்று அலட்சியப்படுத்தி உயிரிழந்திருக்கிறார்.
உயிரிழந்த 13 பேரில், 3 பேர் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்ட பின்னரும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2023ல், கேரளாவில் நாய்கடித்து உயிரிழந்தவர்கள் 25 பேர் என்று பதிவாகியபோதும், பாதிக்கப்பட்டவர்களில் அதிக சதவீதத்தினர் தடுப்பூசி போடப்படவில்லை. "தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் விலங்குகளின் லேசான கடி அல்லது கீறல்களைக் கூட புறக்கணிக்கக்கூடாது. தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தால் மட்டுமே இதை செய்ய முடியும்,'' என, தேசிய வெறிநாய்க்கடி தடுப்பு திட்ட மாநில நோடல் அதிகாரி டாக்டர் ஹரிகுமார் கூறினார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
