அதிர்ச்சி.. சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு 19 வயது இளைஞன் பரிதாப பலி!

 
பிரதமேஷ்

மும்பை மாநிலத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3ம் தேதி மும்பை டிராம்பே பகுதியில் உள்ள ஒரு கடையில் பிரதமேஷ் போக்சே சிக்கன் ஷவர்மாவை வாங்கி சாப்பிட்டார். மறுநாள் அவருக்கு வயிற்று வலியும் வாந்தியும் ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள நகராட்சி மருத்துவமனைக்கு சென்ற பிரதமேஷ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

கடந்த 5ம் தேதி உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, பிரதாமேசின் குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், அன்று மாலை அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் மீண்டும் அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கொலை

பிரதேம்ஸின் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த ஷவர்மா கடை மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர் . பின் ஆனந்த் காம்ப்ளே, அகமது ஷேக் ஆகிய இரு விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web