அதிர்ச்சி... இந்தியாவுக்கு 500% வரி... அமெரிக்காவில் புதிய மசோதா !

 
இந்தியா அமெரிக்கா

அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும் புதிய மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் நோக்கம், உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவுக்கு பண உதவி செய்யும் நாடுகளை பொருளாதார ரீதியாக தண்டிப்பதாக அமைந்துள்ளது.  அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரகாம் இந்த மசோதாவை முன்மொழிந்துள்ளார்.

இந்தியா அமெரிக்கா
இதற்கு 84 செனட்டர்கள்  ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்தியா, உலகில் அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் 3வது நாடாக உள்ளது.  2022-ல் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை 40-44% வரை அதிகரித்துள்ளது. இந்த மசோதா நிறைவேறினால், இந்தியாவின் மருந்து, ஆடை, மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும்போது மிகப்பெரிய வரி செலுத்த வேண்டியிருக்கும். இதனால் இந்தியாவின் வர்த்தகம் மிகக் கடுமையாக பாதிக்கப்படலாம்.
அமெரிக்க அதிபருக்கு இந்த வரியை விதிப்பதில் இருந்து சில நாடுகளுக்கு விலக்கு அளிக்கும் அதிகாரம் உள்ளது. இந்தியா, தற்போது அமெரிக்காவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, இதன் மூலம் இந்த வரியின் தாக்கத்தை குறைக்கலாம்.  

இந்தியா அமெரிக்கா
இந்த மசோதா குறித்து ஆகஸ்ட் மாதத்தில் மேலும் விவாதிக்கப்படும். அதன்படி இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்த மசோதா குறித்து அமெரிக்க செனட்டர் கிரகாமிடம் பேசியதில்  இந்தியாவுக்கு எரிசக்தி பாதுகாப்பு மிக முக்கியம்  , இந்த மசோதா இந்தியாவின் நலன்களை பாதிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?