ஷாக்.. 8 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொலை.. சிக்கிய மூன்று சிறுவர்கள்!

 
 முச்சுமாரி கிராமம் சிறுமி

ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், பகிடியாலா, முச்சுமாரி கிராமத்தில் 8 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில் சிறிய குழந்தைகள் விளையாடும் பூங்கா உள்ளது. கடந்த சனிக்கிழமை பூங்காவிற்கு விளையாடச் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் மகள் திரும்பி வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் பூங்காவிற்கு சென்று பார்த்தனர். சிறுமி இல்லாததால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.


மேலும், அங்குள்ள கால்வாய் பகுதிக்கு சிறுமி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அங்கும் பார்வையிட்டனர். சிறுமி கால்வாய் நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று நந்தியாலாவில் 8 வயது சிறுமி காணமல் போன விவகாரத்தில்  3 சிறார்கள் கைது செய்யப்பட்டனர். இறுதியாக மோப்ப நாயின் உதவியுடன் சிறுமி சென்ற பகுதியில் தேடுதலுக்குப் பிறகு, கால்வாய் அருகே சிறுமி கண்டெடுக்கப்பட்ட பாதையை மோப்ப நாய் சுட்டிக்காட்டியது. மேலும், அதே பகுதியில் வசிக்கும் 3 சிறார்களின் வீடுகளுக்கும் சென்றது. இதன் காரணமாக சந்தேகத்தின் பேரில் சிறார்களிடம் நடத்திய விசாரணையில் பகீர் உண்மை அம்பலமானது.

இளம் நடிகர் கைது

அதாவது, சம்பவத்தன்று பூங்காவில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்த 3 சிறார்கள் சிறுமியை அழைத்து சென்றனர். மூவரும் கால்வாய் அருகே சிறுமியை ஒருவர் பின் ஒருவராக பாலியல் பலாத்காரம் செய்து, மயக்கமடைந்த சிறுமியை கால்வாயில் வீசியுள்ளனர். எதுவுமே நடக்காதது போல் அவர்கள் வீட்டுக்குச் சென்றது உறுதியானது. தற்போது சிறுமியின் உடல் தேடப்பட்டு வருகிறது. சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 3 சிறுவர்களும் சிறுமி படிக்கும் அதே பள்ளியில் படித்து வருகின்றனர். அதில் 2 சிறார்கள் 12 வயதுடையவர்கள். இருவரும் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர். ஒரு பையனுக்கு 13 வயது. 8ம் வகுப்பு படித்து வருகிறார். இதுகுறித்து நந்திக்கொட்டூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web