நள்ளிரவில் அதிர்ச்சி... பயங்கர நிலநடுக்கம்... குலுங்கிய டெல்லி... 128 பேர் பலி! 500க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் நேபாளத்தின் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. அள்ள அள்ள கட்டிட இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை128 ஆக அதிகரித்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 500க்கும் மேலாக உயர்ந்துள்ளது. பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
More then 128 people died and above 500 were injured after a strong 6.4 magnitude earthquake in Nepal... #Nepal #NepalEarthquake #earthquakenepal #earthquake #BREAKING_NEWS #latestnews #NepalNews #Jajarkot #Kathmandu pic.twitter.com/6c4MILmvaY
— Vikas Bailwal (@VikasBailwal4) November 4, 2023
கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேபாளத்தின் வடமேற்குப்பகுதியில் நேற்று இரவு 11.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. இதன் காரணமாக சீட்டுக் கட்டுப்போல கட்டிடங்கள் சரிந்து கீழே விழுந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கிக் கொண்டனர்.
இந்த நிலநடுக்கம், இந்தியாவிலும் பல இடங்களில் உணரப்பட்டது. இதே போன்று சீன எல்லைகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் இந்த நிலநடுக்கத்தினால் நள்ளிரவில் கட்டிடங்கள் குலுங்கியது மக்களை பீதியடைய செய்தது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மலைப்பிரதேசங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஐநூற்றுக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைப்பெற்று வருவதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!