அதிர்ச்சி... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை... சிபிஐ விசாரணை!

 
ஓய்வூதியம் பெற ஆதார் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

உலகம் முழுவதுமே நடிகர் செந்தில் படத்தில் பேசிய வசனத்தைப் போல ‘இன்பர்மேஷன் இஸ் வெல்த்’ என்பதாக தான் இருக்கிறது. டெலிகாலர்கள் இரவு பகலாக பணிபுரிந்து கிரெடிட் கார்ட்டோ, லோன்களோ, க்ளப் உறுப்பினராவதற்கோ, நிலத்தையோ, கார்களையோ, பாலிசிகளையோ விற்பனை செய்ய மெனக்கெடும் தொழிலில் கோடிகள் புரள்கின்றன.

இந்நிலையில், டார்க் வெப்பில் 81 கோடி இந்தியர்களின் ஆதார் கார்டு தரவுகள் கசிந்துள்ளதால் ஆதார் பயனாளர்கள்  பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது வெறும் கூவி கூவி லோன் தருகிற சமாச்சாரம் மட்டுமல்ல. கண் கருவிழி, கைரேகை, பெயர், வயது, ஆண், பெண் விபரம் முதற்கொண்டு இந்தியர்களின் ஒட்டுமொத்த விபரங்களும் அடங்கியிருக்கிறது. இந்த விவரங்கள் கசிந்துள்ளதால், தீவிரவாத செயல்கள் வரையில் என்னவேண்டுமென்றாலும் செய்ய இயலும். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ தனது விசாரணையைத் தொடக்கியுள்ளது.

இதுவரை நாட்டிலேயே நடந்திராத அளவில் மிகப்பெரிய "தரவு கசிவு" (Data Leak) வழக்கு என்று சந்தேகிக்கப்படும் நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் (ICMR) உள்ள 81.5 கோடி இந்தியர்களின் விவரங்கள் விற்பனைக்கு வந்துள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆதார் கார்டு வாக்காளர் அடையாள அட்டை

சுமார் 81.5 மில்லியன் இந்திய குடிமக்களின் பதிவுகளை உள்ளடக்கிய தரவுகள் டார்க் வெப்பில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாகவும். அதில் ICMRல் இருந்து பெறப்பட்ட கோவிட்-19 சோதனை விவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பயனர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் மற்றும் முகவரியுடன் கூடிய ஆதார் மற்றும் பாஸ்போர்ட் தகவல்கள் அடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ரேஷன் கார்டு  ஆதார்

இந்த சம்பவத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, ஐசிஎம்ஆர் புகார் அளித்துள்ள நிலையில் சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web