கனமழையால் சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்.. 7 பேர் பலியான சோகம்!

 
ஹைதராபாத் கட்டிட விபத்து

ஹைதராபாத்தில் உள்ள பாச்சுபள்ளியில் உள்ள ரேணுகா எல்லம்மா காலனியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பை ரைஸ் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் கட்டி வந்துள்ளது. இந்த கட்டுமானத்திற்காக பல மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அங்கு தங்கி கட்டுமான பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திடீரென பெய்த மழையில் அடுக்குமாடி குடியிருப்பின் புதிதாக கட்டப்பட்ட 20 அடி சுவர் இடிந்து அங்கு தங்கியிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் 7 தொழிலாளர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 8 வயது சிறுமியும் இடிபாடுகளில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த மற்ற தொழிலாளர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏதும் இல்லை  . விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரைஸ் டெவலப்பர்கள் முறையான அனுமதி பெற்று கட்டுமான பணிகளை மேற்கொண்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web