அதிர்ச்சி... வனவிலங்கு பூங்காவில் அடுத்தடுத்து 28 மான்கள் உயிரிழப்பு!
கர்நாடக மாநிலம் பெலகாவியில் அமைந்துள்ள கிட்டூர் ராணி சென்னம்மா வனவிலங்கு பூங்காவில் அரிய வகை விலங்குகள் பராமரித்து வரப்படுகின்றன. இதில் பிளாக் பக் எனப்படும் அரிய இன மான்கள் முக்கியமானவை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென 8 மான்கள் உயிரிழந்தன. இதனால் பூங்கா நிர்வாகம் கவலையடைந்தது.
இந்த சம்பவத்துக்கு பின்னர் இன்று (நவம்பர் 15) மேலும் 20 பிளாக் பக் மான்கள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக உதவி வனப் பாதுகாவலர் நாகராஜ் பால்ஹசூரி தெரிவித்துள்ளார். மொத்தம் 2 நாட்களில் 28 மான்கள் உயிரிழந்ததால் வனத்துறையிலும், வனவிலங்கு ஆர்வலர்களிடமும் அதிர்ச்சி நிலவுகிறது.

உயிரிழந்த மான்களின் உடல்களில் கால்நடை மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்து மாதிரிகளை சேகரித்துள்ளனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் பன்னர்கட்ட விலங்கியல் பூங்கா ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. பாக்டீரியா தொற்றே காரணமாக இருக்கலாம் என ஆரம்ப சந்தேகம் தெரிவிக்கப்பட்டாலும், மான்களின் மரணத்திற்கான துல்லியமான காரணம் ஆய்வக முடிவுகள் வந்த பிறகே தெளிவாகும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
