இரவு நேரத்தில் அதிர்ச்சி.. வீடுகளின் மீது கற்களை வீசும் மர்ம ஆசாமிகள்.. பதற்றத்தில் கிராம மக்கள்!

 
ஒட்டப்பாளையம் கிராமம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த ஒட்டப்பாளையம் கிராமத்தில் கடந்த 12 நாட்களாக இரவு நேரங்களில் வீட்டின் மேல் தொடர்ந்து கற்கள் விழுந்து வருகின்றன. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் அருகில் உள்ள கருப்பராயன் கோவிலில் தஞ்சம் அடைந்தனர். பொதுமக்கள் அச்சம் காரணமாக அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.

இந்நிலையில், அப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, மின் விளக்குகள் பொருத்தப்பட்டு கிரேன் உதவியுடன் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன் கேமரா மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே கல் வீச்சால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்தும், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி நேரடியாக ஆய்வு நடத்தினார்.

பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், கல் வீசியவர் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தூக்கமின்றி தவிக்கும் தங்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web