ரயில்வே நிலையத்தில் அதிர்ச்சி.. 7 சவரன் நகையை பறித்து சென்ற கேரளா இளைஞர் கைது!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் மனைவி சித்ரா (37) என்பவர் தனது குடும்பத்துடன் திருப்பதி கோவில் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலம் சென்றுள்ளார். அப்போது ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் வண்டி நின்றதும் வெகு நேரம் நோட்டமிட்ட வாலிபர் தாலி சயின் உட்பட 7 சவரன் நகையை கழுத்தில் இருந்து பறித்து சென்ற போது இதனால் அதிர்ச்சி அடைந்தார்.
சித்ரா கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தினர் வாலிபரை மடக்கி பிடிக்க தூரத்தி உள்ளனர். அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரயில்வே பாதுகாப்புப்படை போலிசார் உதவி ஆய்வாளர் ஜீத், போலீஸ் குமரேசன் ஆகியோர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் அந்த நபரை தீவிர விசாரணை நடத்தியதில் அவர் கேரளா மாநிலத்தை சேர்ந்த நசிர் மகன் அனஸ் (30) என்பது தெரிய வந்தது. இந்த வாலிபர் மீது ஏற்கனவே கோவை, கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளதை அறிந்து அந்த வாலிபரை போலிசார் கைது செய்து மேலும் எங்கு எல்லாம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்று ஜோலார்பேட்டை இருப்புப்பாதை போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!