அதிர்ச்சி.. 2.5 லட்சத்துக்கு விற்கப்பட்ட பெண் குழந்தை.. 5 பேர் அதிரடியாக கைது!

 
விஜயன்

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள திம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். விவசாய வேலை செய்து வரும் இவருக்கு கடந்த 17 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதனால் அவர் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினார். அப்போது, ​​அதே பகுதியில் ஓட்டல் கடை நடத்தி வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி, மகேஷ்குமார் தம்பதியுடன் விஜயனுக்கு பழக்கம் ஏற்பட்டது. பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை உள்ளதாகவும், குழந்தையை பீகாரில் இருந்து தமிழகம் கொண்டு வந்து விஜயனிடம் கொடுக்க இரண்டரை லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் கூறினர்.

மேலும், உரிய ஆவணங்களுடன் குழந்தையை விற்பனை செய்வதாகவும் விஜயனிடம் உறுதியளித்துள்ளனர். இதை நம்பிய விஜயன், அஞ்சலி மற்றும் மகேஷ்குமாரிடம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். அஞ்சலி, மகேஷ்குமார் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயன் தம்பதிக்கு பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை கொடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு சைல்டு லைனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சைல்டு லைன் அமைப்பினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது குழந்தையை விலைக்கு வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து, இச்சம்பவம் குறித்து சைல்டு லைன் அமைப்பினர் அளித்த புகாரின் பேரில், கருமத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அஞ்சலியின் தாய் பூனம் தேவி மற்றும் அவரது இளைய மகள் மேகாகுமாரி பீகாரில் வசிக்கின்றனர். அங்கு, ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு பிறந்த மூன்றாவது பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பதாக கூறி, 1,500 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். பின்னர் குழந்தையை ரயிலில் கோவைக்கு கொண்டு வந்து இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விஜயனுக்கு விற்றது தெரியவந்தது.

இதையடுத்து அஞ்சலி, மகேஷ்குமார், பூனம்தேவி, மேககுமாரி, குழந்தை வாக்கிய விஜயன் உள்ளிட்ட 5 பேரை சூலூர் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில், இவர்கள் மீது கஞ்சா விற்றதாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.மேலும் ஒரு குழந்தையை ஆந்திராவை சேர்ந்த லாரி ஓட்டுநரிடம் ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்றதும் தெரியவந்தது. தற்போது 2 குழந்தைகளையும் மீட்டுள்ள கருமத்தம்பட்டி போலீசார், இந்த கும்பல் ஏற்கனவே குழந்தை கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web