அதிர்ச்சி... கடற்கரையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பீடி பண்டல்கள் பறிமுதல்!

தூத்துக்குடியில் கடற்கரையில் பைபர் படகுடன் ரூபாய் 30 லட்சம் பீடி பண்டல்களை போலீசார் கைப்பற்றியுள்ளார்கள்.
தூத்துக்குடி மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் ரோந்து பணியில் நேற்று இரவு ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையில் 2 இன்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகு நிற்பதை கண்டனர்.
படகை சோதனை செய்ததில் பதிவு எண் இல்லாத மாதா என்ற பெயர் மட்டும் பொறிக்கப்பட்டிருந்தது. படகில் சோதனை செய்ததில் 2000 கிலோ எடையுள்ள 43 பீடி பண்டல்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் இந்தியா மதிப்பு ரூபாய் 8 லட்சம் ஆகும். ஆனால் இலங்கையில் மதிப்பு 30 லட்சம் ஆகும். யாரோ கடத்தல் கும்பல்கள் பைப்பர் படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக திரேஸ்புரம் கடற்கரையில் பண்டல்களை ஏற்றி வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர் படகுடன் பிடி பண்டல்களை பறிமுதல் செய்து இதை கடத்துவதற்காக கொண்டு வந்த கடத்தல் கும்பல்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது