அதிர்ச்சி… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!

 
காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன்

காஞ்சிபுரத்தில் எம்.எல்.ஏ., வீட்டிற்கும், பிரபல ஜவுளிக்கடைக்கும் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நேற்றிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் பிரபல பட்டு சேலை விற்பனை செய்யும் ஜவுளி கடைக்கும், காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ எழிலரசன் வீட்டிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேற்று தொலைபேசி மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார். 

ஜவுளிக்கடையில் வெடிகுண்டு சோதனை

இதையடுத்து காஞ்சிபுரம் டிஎஸ்பி தலைமையிலான போலீசார்  பட்டு சேலை கடைக்கு சென்று வாடிக்கையாளர்களை உடனடியாக வெளியேற்றினர். பின்னர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு சோதனை பிரிவினர் வரவழைக்கப்பட்டனர்.

இதையடுத்து போலீசார் சேலை விற்பனை கடையின் மூன்று மாடிகளிலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால், அங்கு வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.

க்ரைம்

அதே போல், காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள திமுக எம்எல்ஏ எழிலரசன் வீட்டுக்கும் விரைந்த போலீஸார் வீட்டைச் சுற்றி அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அங்கும் எந்தவிதமான வெடிகுண்டும் இல்லை என்பது தெரியவந்தது.

இரண்டு இடங்களிலும் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் போலியாக மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web