அதிர்ச்சி... பேருந்து மோதி கோர விபத்து... 10 பேர் பலி, 35 பேர் படுகாயம்!
டிரக் மீது பேருந்து மோதி கோர விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம் புர்பா பர்த்வான் மாவட்டத்தில் நேற்று காலை இந்த கோர விபத்து ஏற்பட்டது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, தேசிய நெடுஞ்சாலை எண் 19-ல் உள்ள நளா ஃபெர்ரி காட் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக் மீது அதிவேகமாக மோதியதால் இந்த கோர சம்பவம் நிகழ்ந்ததாக தெரிகிறது.

இந்த விபத்து நடந்த உடனேயே சம்பவ இடத்தில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. உயிரிழந்தவர்களில் 8 ஆண்களும், 2 பெண்களும் அடங்குவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், மீட்பு குழுவினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயம் அடைந்த 35 பயணிகளையும், பர்த்வான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்த பேருந்தில் மொத்தம் 45 பயணிகள், அதில் 6 குழந்தைகள் உட்பட பயணம் செய்தனர். இவர்கள் அனைவரும் கங்கை ஆற்றில் புனித நீராடி விட்டு பீகாருக்கு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
