கோர விபத்து... லாரி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி!

 
அரியலூர்

நேற்று லாரி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே 4 பேர்  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரியலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அரியலூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருமானூர் அருகே ஏலக்குறிச்சி பிரிவு அருகே சாலையோரம் ஜல்லி கற்கள் ஏற்றப்பட்ட லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த கார் லாரி மீது மோதியது. இந்த பயங்கர விபத்தால் கார் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. இதனையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் அலறி அடித்து காரில் இருந்தவர்களை மீட்க முயன்றபோது காரில் பயணம் செய்த 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானது தெரிய வந்தது.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, உயிரிழந்த 4 பேரும் ஆண்கள் என்றும், அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

அரியலூரில் நடந்த சுபநிகழ்ச்சியில் ஹோமம் வளர்த்து விட்டு வீடு திரும்பும் போது இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web