அதிர்ச்சி... பள்ளி சுற்றுலாவில்... மாரடைப்பால் 10ம் வகுப்பு மாணவி பலியான சோகம்!

கொண்டாட்டங்களே சிலரது வாழ்க்கையை காலி செய்து விடுகிறது. கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை பலருக்கும் அதிர்ச்சியை ஒளித்து வைத்துள்ளது. சந்தோஷமாக தோழிகளுடன் பள்ளி சுற்றுலாவுக்கு புறப்பட்டு சென்ற மாணவி, சுற்றுலா சென்ற இடத்தில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த பள்ளி மாணவ, மாணவிகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்கோட்டில் புலப்பட்டாவில் உள்ள எம்என்கேஎம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தவர் ஸ்ரீ சயனா. பள்ளியின் சார்ப்பில், மாணவி ஸ்ரீ சயனா உட்பட, 135 மாணவ, மாணவிகளும், 15 ஆசிரியர்களும் என 150 பேர் கொண்ட குழுவினர் மூன்று பேருந்துகளில் மைசூருக்கு சுற்றுலா கிளம்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு மைசூர் அரண்மனைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போது, ஸ்ரீ சயனாவுக்கு திடீரென உடல்நிலை மிகவும் மோசமானதாக கூறப்படுகிறது. உடனடியாக மாணவி ஸ்ரீ சயனாவை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மாணவி ஸ்ரீ சயனாவை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே மாணவி இறந்து விட்டதாக, பரிசோதனைக்குப் பின்னர் அறிவித்தனர்.
மாணவி ஸ்ரீ சைனாவின் மறைவையடுத்து, குழுவினர் தங்களது பயணத்தை பாதியில் நிறுத்தி விட்டு, கேரளத்திற்கு திரும்பினார்கள். சந்தோஷமாக புறப்பட்ட சுற்றுலா, இப்படி பாதியில் சோகத்தில் மூழ்கடித்தது. கொரோனாவுக்கு பின், இளம்வயதினர் பலரும் மாரடைப்பால் இப்படி மரணமடைவது அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!