அதிர்ச்சி... 11ம் வகுப்பு மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு!
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி அபினயா கிணற்றில் சடலமாகக் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அபிநயா, அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவி சடலமாக மிதப்பதைக் கண்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிணற்றில் இருந்து அபிநயாவின் சடலத்தை மீட்டனர்.

அதன் பின்னர் அபிநயாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, தண்டராம்பட்டு காவல்துறையினர், இது தற்கொலையா? அல்லது கொலையா என்று வழக்கை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மாணவி கிணற்றில் சடலமாக மிதந்த சம்பவம் செங்கம் மற்றும் சுற்றியிருக்கும் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
