அதிர்ச்சி... பரோலில் வெளியே வந்த கோவை குண்டுவெடிப்பு வழக்கு முக்கிய குற்றவாளி மரணம்!
சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்திருந்த கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி எஸ்.ஏ. பாஷா இன்று திடீர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 1998ல் கோவை மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தமிழகத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவத்தில் 46 பேர் பரிதாபமாக உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து இந்த குண்டுவெடிப்பு குறித்து அல் உம்மா இயக்கத்தின் தலைவர் எஸ்.ஏ. பாஷா உட்பட 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஏஸ்.ஏ. பாஷா சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார். இந்நிலையில் பரோலில் வெளியே வந்திருந்த ஏஸ்.ஏ. பாஷா உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன் ஏஸ்.ஏ.பாஷா பிணையில் வெளியே வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!