சேலத்தில் பரபரப்பு.. ரூ.666 கோடி மதிப்பு... 810 கிலோ தங்கநகைகள், தங்க கட்டிகளுடன் சாலையில் கவிழ்த கண்டெய்னர் லாரி!

 
தங்க நகை

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கோவையில் இருந்து சேலத்துக்கு சீக்வல் லாஜிஸ்டிக்ஸ் என்ற லாரி சென்று கொண்டிருந்தது. பல்வேறு தனியார் நகைக்கடைகளுக்கு அனுப்ப வேண்டிய தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டிகள் லாரி முழுவதும் இருந்தன. சுமார் 810 கிலோ எடையுள்ள இந்த தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.666 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.ஓட்டுநர் சசிகுமார் (29) உடன் துப்பாக்கி ஏந்திய காவலர் பால்ராஜ் (40), உதவியாளர் நவீன் (21) ஆகியோர் இருந்தனர்.

சேலம் நோக்கிச் சென்ற வாகனம், வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சரக்கு வாகனத்துடன் சென்ற ஓட்டுநர் சசிக்குமார் மற்றும் பாதுகாவலர் பால்ராஜ் ஆகியோர் காயமடைந்தனர். தகவலறிந்து சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காவலர் சசிகுமார், பாதுகாவலர் பால்ராஜ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனத்தை தங்க நகைகளுடன் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

அதன்பின், வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு பின், மாற்று வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார், தங்க நகைகளை சேலத்துக்கு கொண்டு சென்றார். விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web