அதிர்ச்சி.. கொடிய விஷமுள்ள அரிய வெள்ளை பாம்பை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்!

பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்ட பாம்புகள், சிறு விஷப்பூச்சிகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை மீண்டும் பாங்காக்குக்கு அனுப்பி வைத்தனா்.
சென்னை விமான நிலையத்துக்கு சனிக்கிழமை அதிகாலை தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் இருந்த வந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது, பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தபோது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட கொடிய விஷமுள்ள சிறிய வெள்ளை நாகப் பாம்புகள், அணில், சிறு காட்டுக்குருவிகள் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டன.
நெகிழி டப்பாவில் அடைத்து கொண்டு வந்த அவற்றை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மீண்டும் தாய் ஏா்வேஸ் விமானம் மூலம் பாங்காக்குக்கு அனுப்பி வைத்தனா். இதுபோன்ற உயிரினங்கள் பாங்காக்கில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி இந்தியாவுக்கு விமானம் மூலம் கடத்தி வந்து அதிக விலைக்கு முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து தாய் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்கு சுங்கத் துறை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அந்த நாட்டில் அனுமதிக்கப்பட்ட சரக்குகள் என்று பட்டியலிட்டு, கொடிய வன விலங்குகளை சரக்குகள் போன்று அனுப்பி வைப்பதாக அதிகாரி தெரிவித்தனா்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!