அதிர்ச்சி... காதல் திருமணம் செய்த மகள்கள்... அடுத்தடுத்து கொலை செய்த தந்தை!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளது விஹாரி கிராமம். இந்த கிராமத்தில் இளம்பெண்களாக நிஷாத், அப்ஷான் என இருவரும் தங்களது வீட்டை விட்டு வெளியேறினர். தங்கள் இருபதுகளில் பிற பெண்களைப் போலவே இவர்களும் காதல் வயப்பட்டனர். வீட்டில் இருந்து வெளியேறிய அக்கா - தங்கையான இருவரும் தங்களது காதலர்களை திருமணம் செய்து கொண்ட பின்னர், நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி அதன்பிறகு சட்டப்படியும் தங்களது திருமண பந்தத்தை உறுதி செய்து கொண்டனர்.
ஆனால், கிராமத்தில் உள்ள பஞ்சாயத்தில் அந்த இரு பெண்களின் தந்தை, திருமணம் செய்த அந்த நபர்களின் குடும்பத்தினர் தனது 2 மகள்களையும் தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி கேட்டுள்ளார். அதன்படி பஞ்சாயத்தும் திருமணம் செய்து கொண்ட வாலிபர்களின் குடும்பத்தினரிடம், அந்த இரு பெண்களையும் அவரது தந்தையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர். பஞ்சாயத்தாரின் உத்தரவுபடி சகோதரிகள் இருவரும் தங்களது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பின்னர் இருவரையும் வீட்டிற்கு அழைத்துச் சென்ற தந்தை, தனது மகனுடன் சேர்ந்த இருவரையும் துன்புறுத்தியுள்ளனர். பின்னர் இருவரும் குடும்பத்தினருடன் சேர்ந்த துப்பாக்கில் அடுத்தடுத்து அக்கா - தங்கையை சுட்டு கொலை செய்துள்ளனர்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானில் ஆண்டுதோறும் 1,000 பெண்கள் இதுபோன்று கௌரவக் கொலை என்ற பெயரில் கொலை செய்யப்படுவதாக கவலை தெரிவித்துள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!