அதிர்ச்சி... ஆவேசமாக பேசிய திவ்யா... பதவி உயர்வு கிடைத்தும் மறுநாளே துணை ஆட்சியர் தற்கொலை!

 
அதிர்ச்சி... ஆவேசமாக பேசிய திவ்யா... பதவி உயர்வு கிடைத்தும் மறுநாளே துணை ஆட்சியர் தற்கொலை!

கேரளாவில் கண்ணனூர் மாவட்டத்தில் துணை ஆட்சியர் நவீன்பாபு, பதவி உயர்வும், பணியிட மாறுதலும் கிடைத்த நிலையில் பிரிவுபச்சார விழாவிற்குப் பின்னர் மன அழுத்தத்தில் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி ஆசிரியரின் செக்ஸ் தொல்லை காரணமா?! கரூர் மாணவி தற்கொலை குறித்து தாய் பேட்டி!

கேரளா கண்ணனூர் மாவட்டத்தில் துணைக் ஆட்சியராக பணியாற்றி வந்தவர் நவீன் பாபு. இவருக்கு சமீபத்தில் பதவி உயர்வுடன் பணியிடமாறுதல் வழங்கப்பட்டது. பதவி உயர்வு கிடைத்த நிலையில், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அவர் பணியில் சென்று சேர்வதை முன்னிட்டு, கண்ணனூர் மாவட்டத்தில் அவரது நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய ஊழியர்கள் அவருக்கு பிரிவு உபசார விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் அழைப்பு ஏதும் இல்லாமலேயே திடீரென அங்கே வந்து பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திவ்யா, துணை ஆட்சியர் நவீன் பாபு மீது தாறுமாறான குற்றச்சாட்டுகளை கூறினார். பலர் முன்னிலையில் இப்படி நடந்து கொண்டதால் நவீன் பாபு மனம் உடைந்து போனார். 

தற்கொலை

இந்நிலையில், நேற்று அக்டோபர் 15ம் தேதி நவீன் பாபு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சாயத்து தலைவர் திவ்யா பேசியதால், மனம் உடைந்த நவீன் தற்கொலை செய்து கொண்டதாக, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!