அதிர்ச்சி.. 6 வயது சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. தாய், மகள் மீது வழக்குப்பதிவு!

 
ஹரிஷ்

சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் 13வது பிளாக்கில் நான்காவது மாடியில் அருண்குமார் - தேன்மொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 12 வயதில் மகளும், ஆறு வயதில் ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர். அருண்குமார் மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். எதிர் வீட்டில் ஸ்டெல்லாவும் அவரது குடும்பத்தினரும் வசிக்கின்றனர். மேலும், ஸ்டெல்லா வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மதியம் ஆறு வயது சிறுவன் ஹரிஷ் தனது வீட்டில் இருந்து கீழே சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, ஸ்டெல்லாவின் பத்து வயது மகன் அரவிந்த், நாயை நடைபயிற்சிக்காக கீழே கொண்டு வந்துள்ளார்.

அப்போது, அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த மற்றொரு தெருநாய்க்கும், அரவிந்த் கொண்டு வந்த நாய்க்கும் இடையே சண்டை ஏற்பட்டு, இரண்டு நாய்களும் குரைக்க ஆரம்பித்தன. அருகில் இருந்தவர் நாயை விரட்டினார். அப்போது அரவிந்த் கையில் பிடித்திருந்த நாய் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் ஹரிஷ் மீது பாய்ந்து கடித்துள்ளது.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் நாயை விரட்டிச் சென்று ஆறு வயது சிறுவனை மீட்டனர். நாய் கடித்ததில் ஹரிஷ் என்ற ஆறு வயது சிறுவன் முதுகு, கை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனை உடனடியாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெறி நாய் 

தகவலின் பேரில் பேசின் பிரிட்ஜ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நாயை விலங்குகள் நல வாரியத்திடம் ஒப்படைத்தனர். அப்போது நாய் வளர்த்து வரும் ஸ்டெல்லா, அவரது மகள் பிரீதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து பேசின் பிரிட்ஜ் போலீசார் மற்றவர்களை கடித்தல் அல்லது தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web