அதிர்ச்சி... ரூ.2,000 நோட்டுகளை வாங்காதீங்க... திடீரென பறந்த உத்தரவு... குமுறும் பொதுமக்கள்!

 
பேருந்து 2000

நாளை மறுதினம் மே 23ம் தேதி முதல் திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட அரசு பேருந்துகளில் ரூ.2000 நோட்டு தாள்களை பொதுமக்களிடம் இருந்து நடத்துனர்கள் வாங்க கூடாது என்று போக்குவரத்து மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டை வாங்குவார்கள். அரசு பேருந்துகளில் வாங்க மாட்டார்கள். இது தான் திராவிட மாடல் ஆட்சியா என்று சமூக வலைத்தளங்களிலும் மக்கள் கருத்து தெரிவித்து தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்து வருகின்றனர்.

சிறப்பு பேருந்து

இது தொடர்பாக, போக்குவரத்து மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நடத்துனர்கள், பொதுமக்களிடம் இருந்து டிக்கெட் கட்டணங்களைப் பெறும் போது, ரூ.2000 தாள்களை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். 

அரசு பேருந்து

ஒரு நாளைக்கு பத்து ரூ.2000 நோட்டுக்களை மட்டுமே வங்கியில் செலுத்த இயலும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளதால் 2000 ரூபாய் நோட்டுகளை கழகத்தால் வங்கியில் செலுத்த இயலாத நிலை உள்ளது எனவும், எனவே நாளை மறுதினம் மே 23ம் தேதி முதல் நடத்துனர்கள் அனைவரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் பக்குவமாக இதனை எடுத்துரைத்து 2000 ரூபாய் நோட்டுகளை வழித்தடத்தில் வாங்குவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ட்ரெண்டாகி வரும் அதே வேளையில், ரூ.2000 நோட்டுக்களை டாஸ்மாக் கடைகளில் வாங்குவதற்கு தடை விதிக்கவில்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதை மேற்கோள்காட்டி, குடிக்க வசதி செய்து தரும் அரசு, குடிமக்களுக்கும் கொஞ்சம் செய்து தரலாம் என்று கலாய்த்து வருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web