அதிர்ச்சி.. 9 வயது மகனுடன் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமி!

 
சர்வேஸ்

திருவள்ளூர் பள்ளிப்பட்டு அருகே 100 அடி உயர செல்போன் டவரில் போதை ஆசாமி ஒருவர் நேற்று இரவு 9 வயது சிறுவனுடன் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இருவரையும் போலீசார் பத்திரமாக மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை மங்கலங்கியர் தெருவை சேர்ந்தவர் முருகன் (38). நெசவாளர். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும், 3 மகள்கள் உட்பட 5 குழந்தைகளும் உள்ளனர்.

இதனிடையே, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது இளம் மகளுக்கு கணவர் முருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக மனைவி உமாமகேஸ்வரி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் திருத்தணி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்  முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். முருகன் மீதான போக்சோ வழக்கின் விசாரணை முடிந்து விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் குடிபோதையில் இருந்த முருகன் நேற்றிரவு தனது 9 வயது மகன் சர்வேசை அழைத்துக் கொண்டு நடுத்தெருவில் உள்ள 100 அடி உயர செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். மேலும், அவர் மீதான போக்சோ வழக்கை திரும்ப பெற வேண்டும். மனைவி தன்னுடன் வாழ வேண்டும் என்பதற்காக தற்கொலை செய்து கொள்வதாக முருகன் மிரட்டியுள்ளார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ், ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் பள்ளிப்பட்டு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு சிறுவனுடன் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த முருகனை எதிர்த்து இன்று அதிகாலை 9 வயது சிறுவனையும், போதையில் இருந்த முருகனையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதனால் பொதட்டூர்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web