அதிர்ச்சி.. போதையில் அட்டகாசம்.. பெற்றோரிடம் கூறிய மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்.. கஞ்சா குடிக்கி வெறிச்செயல்!

 
பொன்னி

சென்னை திருவான்மியூர் ரங்கநாதன் புரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னி (58). இவரது மகள் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இதனால் மருமகன் அய்யப்பன் தனது மாமியார் பொன்னியை பராமரித்து வந்துள்ளார். தச்சு வேலை செய்து வரும் அய்யப்பன் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றார். இந்நிலையில் வீட்டில் அவரது மாமியார் பொன்னி மட்டும் தனியாக இருந்தார். இரவு 9 மணியளவில் அய்யப்பன் வேலை முடிந்து வீட்டுக்குள் சென்றபோது, சமையல் அறையில் மாமியார் பொன்னி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

இதுகுறித்து அவர் உடனடியாக திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொன்னியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, பொன்னியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அருள்மணி (19) என்ற வாலிபர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நண்பர்கள் மற்றும் சில பெண்களை வரவழைத்து மது குடித்து அட்டகாசம் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.இதற்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த பொன்னி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் அருள்மணி இதை காதில் வாங்காமல் தொடர்ந்து மது, கஞ்சா, கும்மாளம் போன்றவற்றில் ஈடுபட்டதால், அருள்மணியின் செயல் குறித்து பொன்னி தனது பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் அருள்மணியை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அருள்மணி தனது நண்பர்கள் பெசன்ட் நகரை சேர்ந்த விக்னேஷ் (20), திருவான்மூரை சேர்ந்த தினகரன் (21) ஆகியோருடன் சேர்ந்து நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொன்றனர். இதன் பின் திருவான்மியூர் போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web