முரட்டுத்தனமான உறவு... காதலிக்கு அதிகரித்த இரத்தப்போக்கு.. கூகுளில் தேடிய காதலன்!
முரட்டுத்தனமான உடலுறவு காரணமாக காதலிக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதில், என்ன செய்வது எனத் தெரியாமல் காதலன் கூகுளில் தேடிய சம்பவம் இளம்பெண்ணின் உயிரைப் பறித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்அடுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சிக்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். 3 ஆண்டுகளுக்கு முன், சமூக வலைதளத்தில், இளைஞன் ஒருவன் இந்த பெண்ணை சந்தித்தான். நாளுக்கு நாள் இவர்களின் நட்பு காதலாக மாறியது. ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு இருவரும் தொடர்பில்லாமல் இருந்தனர்.. மீண்டும் 7 மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்கள் மூலம் மீண்டும் இணைந்து காதலித்து வந்தனர்.
சம்பவத்தன்று இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்திருந்தனர். இதற்காக அந்த வாலிபர் நவ்சாரியில் ஹோட்டல் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். அன்று கல்லூரிக்கு செல்வதாக இளம்பெண் வீட்டில் கூறிவிட்டு தன் காதலனை சந்திக்க ஹோட்டல் அறைக்கு சென்றுள்ளார். பிறகு இருவரும் உடலுறவு கொண்டனர். அப்போது அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் ரத்தம் கொட்டியது.. இதை பார்த்த வாலிபர் ரத்தத்தை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் விழித்தார்.. மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் பிரச்சனையாக இருக்கும் என நினைத்து ஆன்லைனில் தேட ஆரம்பித்தார். உடலுறவின் போது இரத்தப்போக்கு நிறுத்த என்ன செய்வது என தேடியுள்ளார். ஆனால் அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. ..
எனவே, அவர் தனது நண்பர்களை உதவிக்கு அழைத்தார். ஆனால் இதைச் செய்வதற்கு முன், அந்தப் பெண்ணுக்கு அதிக இரத்தப்போக்கு தொடங்கியது. இதனால் வேறு வழியின்றி நண்பர்களை அழைத்து சென்று அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெண்ணை அழைத்து சென்றுள்ளார்.. மருத்துவர்கள் பரிசோதித்ததில் பெண் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பெண் இறந்த தகவல் அவரது வீட்டில் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் பீதியில் ஓடினர்.. மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்... இதனிடையே பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. அப்போது, அவளது அந்தரங்க உறுப்புகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததால், இரத்தம் அதிகம் வெளியேறியது. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது.
இச்சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "சமீபத்தில் 7 மாதங்களாக காதலித்து வந்தனர். செப்டம்பர் 23ம் தேதி இருவரும் ஹோட்டலில் சந்தித்து உடலுறவு கொண்டனர். பெண்ணுக்கு ரத்தம் வந்த பிறகும் அந்த இளைஞன் தொடர்ந்து அவளுடன் உடலுறவு கொள்வதுதான் நிலைமையை மோசமாக்கியது. ரத்தக்கசிவு ஆரம்பித்த, உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் அந்த பெண்ணை காப்பாற்றியிருக்கலாம்.. ஆனால் கூகுளில் சிகிச்சைக்காக கிட்டத்தட்ட 60 முதல் 90 நிமிடங்கள் வரை தேடியுள்ளார்.
ஆனால் ரத்தப்போக்கு நிற்காததால், நிலைமை விபரீதமாக மாறியது. அதன் பிறகுதான் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். ஆனால் அப்போதும் ஹோட்டலை விட்டு வெளியேறும் முன் அங்கிருந்த ஆதாரங்களை அழித்துவிட்டு.. வலியால் துடித்த பெண்ணை அங்கேயே நிற்க வைத்துவிட்டு அறையிலிருந்த ரத்தக்கறைகளை சுத்தம் செய்துள்ளார். அதன் பிறகு தான் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர், இந்த தாமதம் தான் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
"ஆன்லைனில் சிகிச்சைக்காக பல மணிநேரங்களை வீணடித்து பெண்ணைக் கொன்றதற்காக இளைஞரை இப்போது நாங்கள் கைது செய்துள்ளோம். அவர் அக்டோபர் 4 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இனிமேல் அவரிடம் விசாரணை நடத்தப்படும்’’ என்று காவல் அதிகாரி தெரிவித்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!