அதிர்ச்சி.. திகார் சிறையில் கோஷ்டி மோதல்.. கைதியை ஊசியால் குத்திய சக கைதிகள்!

 
 திகார் சிறை

தலைநகர் டெல்லியில் உள்ள திகார் சிறை மருத்துவமனையின் OPD (வெளிநோயாளர் பிரிவு) கைதிகளுக்கு இடையே புதன்கிழமை கைகலப்பு ஏற்பட்டது. காலை 10:45 மணியளவில், சிறையின் OPD யில் உள்ள மருத்துவர்களைப் பார்க்க கைதிகள் சென்றுள்ளனர். அப்போது அவர்களில் ஹிதேஷ், கௌரவ், குரீந்தர் என்ற கைதிகளும் வரிசையில் நின்று தங்கள் முறைக்காக காத்திருந்தனர்.

அப்போது இரண்டு கைதிகளுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. கைதிகளான கௌரவ் மற்றும் குரிந்தர் இருவரும் சேர்ந்து ஹிதேஷை ஊசியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் காயங்கள் ஏற்பட்டன. மருத்துவமனை வாயிலில் இருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து ஹிதேஷைக் காப்பாற்றினார்.

சிறை

அதிகாரி மற்ற இரண்டு கைதிகளையும் சிறைக்கு அனுப்பினார். பின்னர் காயமடைந்த ஹிதேஷ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து ஹரி நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web