அதிர்ச்சி.. யானையை போட்டோ எடுக்கச் சென்ற பிரபல புகைப்பட கலைஞருக்கு நேர்ந்த சோகம்!

 
 ஏ.வி.முகேஷ்

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ஏ.வி.முகேஷ் (34). பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மாத்ருபூமி இதழில் முதன்மை புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வந்தார். முன்னதாக டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பணிபுரிந்துள்ளார். இன்று காலை பாலக்காடு அருகே கொட்டக்காடு பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

யானை

யானைகளை புகைப்படம் எடுக்க முகேஷ் அங்கு சென்றிருந்தார். யானைகள் ஆற்றைக் கடப்பதை முகேஷ் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த யானை முகேஷை தாக்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொலை

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு பத்திரிகைத் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த புகைப்பட கலைஞர் ஏ.வி.முகேஷின் குடும்பத்திற்கு கேரள அரசு போதிய நிதியுதவி வழங்க வேண்டும் என பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web