அதிர்ச்சி.. ஹிஜாப் அணிய மறுத்த பெண் ஊழியர்கள்.. ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மூடிய அதிகாரிகள்!

 
ஹிஜாப் பர்தா

இஸ்லாமிய மத சட்டத்தை கடுமையாக பின்பற்றும் ஈரானில், 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, ஹிஜாப் சரியாக அணியாததால், தெஹ்ரானில் போலீசார் நடத்திய தாக்குதலில், மாஷா அமினி என்ற 22 வயது சிறுமி கொல்லப்பட்டார்.  இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. ஆனால், ஈரான் அரசு அந்த போராட்டங்களை கடுமையாக ஒடுக்கியது.

ஹிஜாப்

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பலர் தூக்கிலிடப்பட்டனர். ஹிஜாப் சட்டங்களையும் கடுமையாக்கியது. இதற்கிடையில், துருக்கிய ஏர்லைன்ஸ் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கிளை அலுவலகம் உள்ளது. இந்த விமான நிறுவனத்தில் பணிபுரியும் ஈரானிய பெண்கள் ஹிஜாப் அணியாமல் பணிபுரிவதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, பெண்கள் ஹிஜாப் அணிய மறுத்த துருக்கிய ஏர்லைன்ஸ் அலுவலகத்தை ஈரான் அரசு மூடியது. ஈரான் போலீசார் விமான நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்று அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web