அதிர்ச்சி.. சிக்கன் ரைஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு நேர்ந்த சோகம்!

 
ஏழுமலை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இயங்கி வரும் உணவகத்தில் சிக்கன் ரைஸ் உணவை சாப்பிட்ட ஏழுமலை குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அவர்கள் அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், அஷ்வின் (12) என்ற சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். மற்ற நான்கு பேரும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அனைத்து உணவகங்களிலும் அடிக்கடி திடீர் சோதனை நடத்த வேண்டும் எனவும், ஆய்வு நடத்தாததால் தரமற்ற உணவுகளை வழங்குவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!