அதிர்ச்சி.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்ம மரணம்.. தீவிர விசாரணையில் போலீசார்!

 
ராகேஷ் தோத்வா

மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ரவ்டி கிராமத்தில் வசிப்பவர் ராகேஷ் தோத்வா . 27 வயதான இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கு லலிதா தோத்வா என்ற பெண்ணுடன் திருமணமாகி லஷ்மி வயது 9, பிரகாஷ் வயது 7 மற்றும் அக்ஷய் வயது 5 என  ஒரு மகள் இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் நேற்று (திங்கட்கிழமை) காலை 9.20 மணியளவில் அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘ராகேஷ், அவரது மனைவி லலிதா மற்றும் இரு குழந்தைகளும் வீட்டின் மேற்கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.அவர்களின் மகள் லஷ்மி மட்டும் தரையில் இறந்து கிடந்தார்.இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கும் காலை 6 மணிக்கும் இடையில் இடம்பெற்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள் சந்தேகிக்கின்றன. தற்போது இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான கடிதம் ஏதும் வீட்டில் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தற்கொலை

ஆனால், எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இறப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாய் குழு மற்றும் தடயவியல் குழுவினர் உடல் உறுப்புகளை சேகரித்து வருகின்றனர். இதற்காக அலிராஜ்பூர் சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web