அதிர்ச்சி.. அடுத்தடுத்து 5 பேர் கொடூர கொலை.. போதை ஆசாமி எடுத்த விபரீத முடிவு!

 
அனுராக் சிங்

உத்தரபிரதேச மாநிலம் சிதாபூர் மாவட்டத்தில் உள்ள பிளாஹாபூர் கிராமத்தை சேர்ந்தவர் அனுராக் சிங் (வயது 42). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால், அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதனால் அனுராக் சிங் குடும்பத்தினருடன் சண்டை போட்டு வந்துள்ளார்.

இன்று காலை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அனுராக் சிங், தனது தாய் சாவித்திரியை (65) சுட்டுக் கொன்றுவிட்டு, தனது மனைவி பிரியங்காவை (40) சுத்தியலால் கொன்றார். ஆத்திரத்தில் அனுராக் தனது மூன்று குழந்தைகளான அஸ்வி (12), அர்னா (8), அத்விக் (1) ஆகியோரை வீட்டின் மாடியில் இருந்து தூக்கி எறிந்து கொன்றார். இதையடுத்து அனுராக் சிங் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் பிளாக்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் அனுராக் சிங் வீட்டின் முன்பு திரண்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web