அதிர்ச்சி.. எலி பேஸ்ட்டை வைத்து விளையாடிய 4 குழந்தைகள் கவலைக்கிடம்!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பி. கொட்டாரக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவருக்கு அனுஷ்கா (3), பாலமித்ரன் (2) என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அந்த கிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு, அவரது தங்கை அறிவழகி, குடும்பத்துடன் வந்துள்ளார். அறிவழகியின் குழந்தைகளான லாவண்யா (5), ரஷ்மிதா (2), மணிகண்டன் குழந்தைகளான அனுஷ்கா (3), பாலமித்திரன் (2) ஆகியோர் பல் துலக்கும் பேஸ்ட் என நினைத்து வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அடுத்து, மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிதம்பரம் போலீசார் மற்றும் ஆலடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை தெரியாமல் சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
