அதிர்ச்சி.. ரயில் முன் பாய்ந்து 4 பேர் தற்கொலை.. ரயில்வே ஊழியர் எடுத்த விபரீத முடிவு!

 
 நரேந்திர சதார்

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள சிரோடா கிராமத்தைச் சேர்ந்தவர் ரயில்வே ஊழியர் நரேந்திர சதார். இவரது மனைவி ரீனா. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 மாத பெண் குழந்தையும் இருந்தது.  இந்நிலையில் நரேந்திர சதார்தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ரயில்

சிஹோடா கிராமத்தில் உள்ள பெடகாட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இன்று காலை உயிரிழந்த 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதே இடத்தில் நரேந்திர சதாரின் இருசக்கர வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.  இதையடுத்து போலீசார் 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ்

நேற்று தனது மகள் ரீனா தனக்கு போன் செய்து தனக்கும் மாமியாருக்கும் இடையே தகராறு இருப்பதாக கூறியதாகவும் அதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் ரீனாவின் தந்தை கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web