அதிர்ச்சி... 13வது மாடியிலிருந்து தவறி விழுந்து இளம்பெண் மரணம்!

உலகம் முழுவதுமே செல்ஃபி புகைப்படங்களும், இன்ஸ்டா ரீல்ஸ்களுமாக பலரது வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் செல்ஃபி புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தால் இளம்பெண் ஒருவர் 13வது மாடியில் இருந்து செல்ஃபி எடுக்க முயற்சிக்கையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சூடசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி (23).
ஆந்திராவை சேர்ந்த நந்தினி, சூடசந்திராவில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், இவரது வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் உயரமான ஒரு கட்டிடத்துக்கு தனது தோழிகளுடன் சென்றிருந்தார். அப்போது அந்த கட்டிடத்தின் 13வது மாடிக்கு சென்ற நந்தினி, அங்கிருந்து செல்போனில் 'செல்ஃபி' புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார்.
புதிதாக கட்டப்பட்டு வரும் அந்த கட்டிடத்தில் இன்னும் முழுமையாக தடுப்புச்சுவர்கள் கட்டப்படாத நிலையில், நந்தினி, கட்டிடத்தின் 13வது மாடியில், கட்டிடத்தின் விளிம்பில் நின்று 'செல்ஃபி' புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று 13வது மாடியில் இருந்து நந்தினி கால் தவறி கீழே தரையில் விழுந்தார்.
இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் நந்தினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து நந்தினியின் தோழிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பரப்பன அக்ரஹாரா போலீசார் விரைந்து சென்று நந்தினி உடலை கைப்பற்றி, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் நந்தினி 'செஃல்பி' எடுக்க முயன்ற போது கட்டிடத்தில் இருந்து கால் தவறி விழுந்து பலியானது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!