அதிர்ச்சி... இளம்பெண் முகத்தில் ஆசிட் வீசிய தோழி!

மத்திய பிரதேச மாநிலத்தில், இளம்பெண் மீது திராவகம் வீசிய தோழியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 50 சதவீதம் தீக்காயங்களுடன் இளம்பெண் ஸ்ரத்தாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் ஸ்ரத்தா தாஸ் (21). அதே பகுதியை சேர்ந்தவர் இஷிதா சாகு (22). பள்ளிகாலம் தொடங்கி இருவரும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்துள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக ஸ்ரத்தா தாஸ் இஷிதாவுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இரவு ஸ்ரத்தாவை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு இஷிதா நேரில் சென்றுள்ளார். தான் ஸ்ரத்தாவுக்கு ஆச்சரிய பரிசு ஒன்றை அளிக்க விரும்புவதாக கூறியதை நம்பி, ஸ்ரத்தா இஷிதாவைப் பார்த்ததும், தனது வீட்டு வாசலுக்கு வந்தார். அப்போது இஷிதா தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை ஸ்ரத்தா மீது வீசினார்.
முகம், உடல் கருகி ஸ்ரத்தா வலியில் அலறி துடித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஸ்ரத்தாவின் பெற்றோர் அங்கு வந்து அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். 50 சதவீதம் தீக்காயங்களுடன் ஸ்ரத்தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இஷிதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!