அதிர்ச்சி.. 20 பயணிகளுடன் தலைக்குப்புற கவிழ்ந்த அரசு பேருந்து.. பலர் படுகாயம்!

 
திருப்புல்லாணி விபத்து

ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை நோக்கிச் சென்ற அரசு நகரப் பேருந்து எண்.1 திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்துக்கு முன்னால் வந்த டிராக்டர் ஒன்று பேருந்துக்கு வழிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு பஸ் டிரைவர் டிராக்டரை முந்தி செல்ல முயன்றார். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தில் நிலை தடுமாறி தலிக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கீசல்கரை மாவட்ட ஆட்சியர் பழனி அப்பகுதி மக்களுடன் இணைந்து பள்ளங்களில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றார்.இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், காயமடைந்தவர்களை மாவட்ட ஆட்சியர் பழனி அரசு வாகனத்தில் ஏற்றி கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அதன்பின், அங்கிருந்து மேல் சிகிச்சை தேவைப்படுபவர்கள் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து திருப்புல்லாணி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web