அதிர்ச்சி... நடுரோட்டில் அரசுப் பள்ளி ஆசிரியர் கொடூரமாக வெட்டிப் படுகொலை!

 
கண்ணன் ஆசிரியர் கொலை

கமுதி அருகே நடுரோட்டில், டூ வீலரில் சென்றுக் கொண்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியரை வழிமறித்த மர்ம கும்பல், கதற கதற அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கே.பாப்பாங்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு இடைநிலை ஆசிரியராக கண்ணன்(51) என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று முதல் நாளாக கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டதால், வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் கண்ணன், கே.பாப்பாங்குளம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.

கண்ணன் ஆசிரியர் கொலை

அப்போது, கே.பாப்பாங்குளம் அருகே அவர் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்த மர்மகும்பல், கண் இமைக்கும் நேரத்தில் ஆசிரியர் கண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பிற வாகன ஓட்டிகள் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கமுதி போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த கண்ணனை மீட்டு, கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே கண்ணன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடித்தே கொலை

முதற்கட்ட விசாரணையில் ரியல் எஸ்டேட் மற்றும் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசுப் பள்ளி ஆசிரியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web