அதிர்ச்சி... அரவணைப் பாயாசத்தில் அதிகளவு பூச்சிக்கொல்லி... 6,65,000 டின்களை அழிக்க உயர்நீதிமன்றம் அனுமதி!

 
சபரிமலை அரவணை பாயாசம்

சபரிமலையில், பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் அரவணை பாயாசம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ஏலக்காயில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது தெரிய வந்ததையடுத்து, 6 லட்சத்து 65 ஆயிரம் அரவணை பாயாச டின்களை அழிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

வருடம் முழுவதும் சபரிமலைக்கு மலையேறி செல்ல பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படா விட்டாலும், ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பு சமயங்களிலும் கோவில் நடை திறந்திருக்கும் சமயங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலைக்கு இருமுடி கட்டி, உலகம் முழுவதுமிருந்தும் பக்தர்கள் விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க வந்து செல்கிறார்கள். 

சபரிமலை

தை, விஷூ, கார்த்திகை காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்கிறார்கள். இந்த சந்நிதானத்தில் பக்தர்களுக்கு விற்பனைச் செய்யப்படும் அரவணை பாயாசத்தை தங்கள் வீடுகளுக்கும் பக்தர்கள் வாங்கிச் சென்று, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும், உறவினர்கள், நண்பர்களுக்கும் தருகிறார்கள்.

இந்நிலையில், சபரிமலையில் அரவணை பாயாசம் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமானதாக இல்லை என கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த உத்தரவின்பேரில், ஏலக்காயின் தரம் குறித்து திருவனந்தபுரம் அரசு ஆய்வகம் பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்தது.

இந்த ஆய்வின் அறிக்கையில் அரவணை ஏலக்காய் தரமற்றது எனவும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதால் ஏலக்காய் பாதுகாப்பானது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஜனவரி மாதம் சபரிமலையில் அரவணை  பயாசம் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பயன்படுத்தப்படாமல் உள்ள 6.65 லட்சம் அரவணை பாயாசம் டின்களை அப்புறப்படுத்தி, யாருக்கும் தராமல் அழிப்பதற்கு கேரள அரசுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் தேவசம் போர்டு அனுமதி கோரியது. பூச்சிமருந்து கலந்ததாக கூறப்பட்ட 6.65 லட்சம் அரவணை பாயாச டின்கள் சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டன.

அதன்பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்பட்ட சோதனையில் அரவணை சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது என்று அறிவிக்கப்பட்டது. அரவணை தயாரிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் அதனை பயன்படுத்தாவிட்டால் அது உண்ண முடியாததாகிவிடும். ஆனால், தயாரித்து இரண்டு மாதங்கள் ஆனதால், இந்த அரவணையை விற்க மாட்டோம் என தேவசம் போர்டு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ஏலக்காயில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த அரவணை தயாரிக்கப்பட்டது என்று கூறி, விற்பனை நிறுத்தப்பட்ட அரவணையை அழிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அரவணையை அழிக்க தேவசம் போர்டும், மாநில அரசும் ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அதை எப்படி, எங்கு அழிப்பது என்பதை இருவரும் சேர்ந்து முடிவு செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அரவணை விற்பனைக்கு தடை விதித்த கேரள உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கையையும் உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web