அதிர்ச்சி.. சட்டவிரோத நுழைவு.. பீகார் சிறையில் இருந்த சீன கைதி உயிரிழப்பு!

 
 லி ஜியக்யூ

சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் லி ஜியக்யூ. நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். இதற்கிடையில், பீகார் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள பிரம்பூரா நகரின் லக்ஷ்மி சவுக் பகுதியில் லி ஜியக்யூவை போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், முறையான ஆவணங்கள் இல்லாமல் ஜியக்யூ இந்தியாவுக்குள் நுழைந்தது தெரியவந்தது.

மேலும், அவரிடம் இருந்து சீன வரைபடம், செல்போன், சீன, இந்திய, நேபாள நாட்டு கரன்சி நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.லி ஜியக்யூ கைது செய்யப்பட்டு முசாபர்நகர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்கொலைக்கு முயன்றார். ஜியக்யூ சிறைக் கழிவறையில் உடைந்த கண் கண்ணாடியால்  ஆண் உறுப்பைச் சிதைத்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில்,லி ஜியக்யூ மயக்கமடைந்துள்ளார். பின்னர் போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த லி ஜியக்யூ இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

 

From around the web