சென்னையில் அதிர்ச்சி.. வங்கிக்குள் நுழைந்து ஊழியரை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்!
சென்னை தி.நகர், பர்கிட் ரோடு பகுதியில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இன்று வங்கி ஊழியர்கள் வழக்கம் போல் பணியை மேற்கொண்டு வந்த நிலையில், அப்போது வாடிக்கையாளர் போல் நடித்து வங்கிக்குள் நுழைந்த நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்த வங்கி ஊழியரை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் வங்கி ஊழியரின் காதில் பலத்த காயம் ஏற்பட்டது. வங்கி ஊழியரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற சக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் அவர் பிடிபட்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாம்பலம் போலீசார் காயமடைந்த வங்கி ஊழியரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து வங்கி ஊழியரை சரமாரியாக வெட்டிய நபரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!