சென்னையில் அதிர்ச்சி.. மெட்ரோ வாட்டரில் கலந்த கழிவுநீர்? உடல் உபாதையால் சிறுவன் பரிதாப பலி!

 
சிறுவன் பலி

சென்னை சைதாப்பேட்டையில் பீகாரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் வயிற்றுப்போக்கால் உயிரிழந்தான். உயிரிழந்த சிறுவனின் 7 வயது சிறுமியும் அதே உடல்நிலையுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சைதாப்பேட்டை அமித் காலனியில் பீகாரைச் சேர்ந்த ராகேஷ் குமார், சுமன் ராணி ஆகியோரின் இரு குழந்தைகளுக்கு உடல் உபாதை ஏற்பட்டது. சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பீகாரைச் சேர்ந்த தம்பதி, 4 குழந்தைகளுடன் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி கட்டிட வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சிறுவனுக்கும், சிறுமிக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி யுவராஜ் 11 வயது சிறுவன் உயிரிழந்தான். சிறுமியும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து, சைதாப்பேட்டை போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ராஜீவ்காந்தி மருத்துவமனை

அதில், மக்கள் குடிக்கும் மெட்ரோ வாட்டரில் கழிவு நீர் கலந்ததே சிறுவன் உயிரிழப்பிற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.இப்பகுதியில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, மெட்ரோ வாட்டரில் கழிவுநீர் கலந்துள்ளதால், 20க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.மாநகராட்சி அதிகாரிகளுக்கும், மெட்ரோ வாட்டர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தும் அவர்கள் அலட்சியமாக இருந்ததால் சிறுவன் உயிரிழந்ததாக குற்றம் சாட்டுகின்றனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web