கோவையில் அதிர்ச்சி.. கள்ளச்சாராயம் குடித்து இருவர் மயக்கம்? தீவிர விசாரணையில் போலீசார்!

 
ஆனைமலை

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த மலையோர கிராமமான மஞ்ச நாயக்கனூரில் டீக்கடை நடத்தி வருபவர் ரவிச்சந்திரன் (வயது 55), நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு ரவிச்சந்திரன், மகேந்திரன் (46) ஆகியோருக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது.இதையடுத்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கள்ளச்சாராயம் அருந்தியதால் இருவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வால்பாறை டிஎஸ்பி ஸ்ரீநிதி தலைமையில் இன்ஸ்பெக்டர் குமார், கிராம நிர்வாக அலுவலர் காயத்ரி ஆகியோர் மஞ்சநாயக்கனூர் கிராமத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "ரத்த அழுத்தம் காரணமாக ரவிச்சந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். மகேந்திரனுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக மது அருந்தவில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: மாவடப்பு மலைக்கிராமத்தில் ரவிச்சந்திரன், மகேந்திரன், ராமகிருஷ்ணன், ராஜன் லட்சுமணன், செந்தில்குமார், முத்துக்குமார் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் நேற்று ஒரு லிட்டர்சாராய பாட்டில்களை வாங்கி சென்றுள்ளனர். அதை 7 பேரும் சேர்ந்து கோபால்சாமி மலை அருகே உள்ள தோப்பில் வைத்து குடித்தனர். ரவிச்சந்திரன், மகேந்திரன் ஆகியோர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் கள்ளச்சாராயம் புழக்கம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web