காதலனை சரமாரியாக வெட்டிக் கொன்ற மர்ம கும்பல்...காதலி கண் முன்னே கொடூரம்!

 
உதயகுமார்

சென்னை தாம்பரம் கிழக்கு திருவள்ளூர் நகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் உதயா என்ற உதயகுமார் (22), பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது காதலியுடன் பைக்கில் சிட்லபாக்கம் சேது நாராயணன் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் உதயாவை வழிமறித்து காதலியின் கண் எதிரே  அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

உயிருக்கு பயந்து ஓடிய உதயாவை துரத்திச் சென்ற கும்பல், மீண்டும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த உதயாவின் காதலி பயந்து ஓடியதாக கூறப்படுகிறது. ஒரு இளைஞனை நடுரோட்டில் வெட்டிவிட்டு, குற்றவாளி ஓடுவதைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பின் அங்கு சென்ற சிட்லபாக்கம் போலீசார் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த உதயாவை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதனிடையே உதயாவை வெட்டிய 3 பேரும் சேலையூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். சம்பவம் நடந்த இடம் சிட்லபாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்டதால் 3 பேரையும் போலீஸார் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உதயா என்ற கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, சிட்லபாக்கம் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, சரண் அடைந்த மூவரிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் திருவள்ளூர் மாப்பேடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் நரேஷ் (24), கல்லூரி மாணவர் கிருஷ்ணா (19), சாந்தகுமார் (19) என்பது தெரியவந்தது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தாம்பரம் கிழக்கு திருவள்ளுவர் நகர் கண்ணப்பர் தெருவில் ஆட்டோ நிறுத்தும் தகராறில் உதயகுமார், நரேஷ் இடையே தகராறு ஏற்பட்டது. நரேஷை உதயகுமார் கத்தியை காட்டி மிரட்டியதாகவும், ஆபாசமாக திட்டியதாகவும் தெரிகிறது. விசாரணையில் முன்விரோதம் காரணமாக நரேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து உதயாவை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web