கேரளாவில் அதிர்ச்சி... ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை!

 
கேரளாவில் அதிர்ச்சி... ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை!

கேரளாவில் கணவனும், மனைவியும் ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்த  நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில்  சோட்டானிக்கரை பகுதியில் வசித்து வந்த தம்பதியர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ள நிலையில், வீட்டில் குடும்பத்தினர் 4 பேரும் தற்கொலைச் செய்துக் கொண்டனர்.

கேரளாவில் அதிர்ச்சி... ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை!

இந்த தம்பதியினர் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு போகாததாலும், வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததாலும் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, தம்பதியர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். அவர்களது மகனும், மகளும் படுக்கையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர். இதையடுத்து 4 பேரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கேரளாவில் அதிர்ச்சி... ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை!

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில், பண பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!