மதுரையில் அதிர்ச்சி... காதலனை மறக்க முடியலை... கணவனை திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய மனைவி!

 
பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

காதலனை மறக்க முடியாமல் திருமணத்திற்கு பின்னரும் காதலனுடன் கள்ளத்தொடர்பை வைத்திருந்த மனைவி, ஒருகட்டத்தில் இது குறித்து தெரிய வந்ததும் கணவன் கண்டித்ததால் கணவனைத் தீர்த்துக் கட்டிய விவகாரம் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அசோக்நகரைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (42).  ராணுவ வீரரான இவரது மனைவி ஜோதி (36). இந்த தம்பதிக்கு 18 வயதில் ஒரு மகன் உள்ளார். விடுமுறைக்கு சொந்த வந்திருந்த தர்மலிங்கம் கடந்த ஏப்ரல் 3ம் தேதி விபத்தில் உயிரிழந்தார். போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தர்மலிங்கம் இறந்தது திட்டமிட்ட கொலை என்பது தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் கூறியதாவது, தர்மலிங்கத்தின் மனைவி ஜோதி, திருமணத்திற்கு முன்பே பால்பாண்டி என்பவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால் ஜோதியின் காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து தர்மலிங்கத்துக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். தர்மலிங்கத்துடனான திருமணத்திற்கு பிறகும் ஜோதி பால்பாண்டியை மறக்க முடியாததால் அவருடன் தொடர்ந்து கள்ளத்தொடர்பை வைத்து வந்துள்ளார். இந்த விஷயம் கணவர் தர்மலிங்கத்துக்கு தெரியவர, மனைவியை கண்டித்துள்ளார்.

கைது

இதனால் ஆத்திரமடைந்த ஜோதி, தனது காதல் உறவுக்கு தடையாக இருக்கும் கணவனை கொலைச் செய்ய திட்டமிட்டார். அதன்படி, விடுமுறைக்காக ஊருக்கு வந்த தர்மலிங்கம், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, ​​திட்டமிட்டு வேன் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து இந்த விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், அவரது மனைவி ஜோதி, கொலைக்கு உதவிய 18 வயதுடைய ஜோதியின் மகன், டிரைவர் பாண்டி, கிளீனர் அருண்குமார், உக்ரபாண்டி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பால்பாண்டியைத் தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web