தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி... கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது!

 
திருச்சியில் காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது!
 

தமிழகத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்து அதிர்ச்சியாக பல மாவட்டங்களிலும் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது பெரும் கவலையளிக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் போலீசாரை அரிவாளால் தாக்கிய நிலையில், திருச்சியில் கஞ்சா வியாபாரிகள் குறித்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நேற்று திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா கடத்தல்
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை மடக்கிப் பிடித்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஆட்டோவில் இருந்த ஒருவர் தப்பியோடிய நிலையில், மீதமுள்ள 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் அவர்கள் பிரதீஷ், கிருபாகரன்,ரெஞ்சித் மற்றும் விஷ்ணு என்பதும் அவர்களிடம் 2 கிலோ கஞ்சா இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web