நள்ளிரவில் அதிர்ச்சி.. உலா வரும் முகமூடி கொள்ளையர்கள்.. பதறும் கடை உரிமையாளர்கள்!

 
எலக்ட்ரிக் கடை திருட்டு

கோவை சின்னவேடம்பட்டி அத்திபாளையம் பகுதியில் "Eodome Electric" என்ற எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர். சத்தியமூர்த்தி ஐந்து வருடங்களாக மேலாளராகப் பணியாற்றி வருகிறார். வழக்கமாக இரவு 7:00 மணிக்கு நிறுவனம் மூடப்பட்டு, 9:00 மணிக்கு திறக்கப்படும் நிலையில், இன்று காலை வழக்கம் போல் நிறுவனத்துக்கு வந்த சத்தியமூர்த்தி, சிசிடிவி கேமராக்கள் திரும்பி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நள்ளிரவு 1.30 மணியளவில் முகமூடி அணிந்த 2 நபர்கள் சுவர் ஏறி நிறுவனத்திற்குள் நுழைந்து சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருட முயன்றது தெரியவந்தது.சத்தியமூர்த்தி சரவணம்பட்டி காவல்நிலையத்தில் அளித்த புகாரில், "முகமூடி அணிந்த நபர்கள் தங்கள் நிறுவனத்தில் திருட முடியாமல், கேட்டை உடைத்துச் சென்றுள்ளனர்.

எனவே திருட முயன்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நள்ளிரவில் முகமூடி அணிந்து கொள்ளையடிக்க முயன்ற திருடர்களை தேடி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web